குஜராத் மாநிலத்தின் முதல்வர் பூபேந்திர படேல் பிரதமரின் காரில் ஏறும்போது பிரதமரின் பாதுகாப்பு வீரரான ஒருவர் அவரை ஏறவிடாமல் மறைத்தது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
குஜராத்தில் விரைவில் தேர்தல் வர உள்ள நிலையில், அம்மாநிலத்தில் பிரதமர் சமீபகாலமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.மேலும் பல ஆயிரம் கோடிக்கான திட்டங்களை துவங்கி வைத்து வருகிறார்.மீண்டும் ஆட்சியை தக்கவைக்க பல்வேறு பிரச்சாரங்களை பிரதமரும் அம்மாநில முதல்வரும் சேர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில்தான் குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல் பிரதமரின் காரில் எற முயற்ச்சித்தார். அப்போது பிரதமரின் பாதுகாப்புஅதிகாரி பிரதமரின் காரில் எற சென்ற பூபேந்திர படேலை தடுத்து நிறுத்தியுள்ளார்.இது தொடர்பான வீடியோ வெளியானதை அடுத்து பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.
ஒரு மாநிலத்தின் முதல்வரே பாதுகாப்பு படையினரால்அவமதிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து எதிர்க்கட்சிகள்கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.