வழிக்கு வந்த மாலத்தீவு..!! ஜெய்சங்கர் போட்ட ஒப்பந்தம்..!! இனி சீனாவுக்கு..?
இந்தியா மாலத்தீவுக்கு இடையே கடந்த சில ஆண்டுகளாக மோதல் நடந்து வரும் நிலையில், தற்போது மூன்று நாள் பயணமாக “வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்” மாலத்தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த முறை சுற்றுப்பயணத்தின் போது இருநாடுகளுக்கும் இடையேயான பல்வேறு முக்கிய ஒப்பந்தகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது..
மாலத்தீவு நாடானது இந்தியாவிற்கு மிக நெருக்கமான நாடுகளில் ஒன்றாக இருந்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு மாலத்தீவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் சீனா தனது ஆதரவு கொடுத்த முகமது முய்சுவை அதிபராக தேர்வு செய்தது.. அதன்பின் மாலத்தீவின் செயல்பாடுகளில் பல்வேறு மாற்றம் நடைபெற்றது. அதாவது பிரதமர் மோடி லட்சத்தீவு பயணத்தை விமர்சித்தது பெரும் சர்ச்சையை வெடித்தது. அதனால் மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் மாலத்தீவில் இருந்து வெளியேற்றபட்டார்கள். அதனால், இந்தியா- மாலத்தீவு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.
அதன் பின் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி மாலத்தீவு சென்றார். அங்கு முகமது முய்சுவை சந்தித்து பேசியதில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. யுபிஐ சேவையும் மாலத்தீவில் அறிமுகம் செய்ய பல்வேறு ஒப்பந்தகள் கையெழுதிடப்பட்டது..
இதுகுறித்து அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது, “டிஜிட்டல் பரிவர்த்தனையானது பெருமளவில் இந்தியாவில் தான் நடக்கிறது.. அத்தகைய டிஜிட்டல் கட்டமைப்பை மாலத்தீவில் அறிமுகப்படுத்துவதற்கான ஒப்பந்தத்திற்கு மாலத்தீவு சம்மதித்துள்ளது..
மாலத்தீவு நாட்டை தன்வசப்படுத்திக்கொண்டு இந்தியாவை ஆக்கிரமிக்க சீனா போட்ட திட்டத்திற்கு உடைக்கும் விதமாக இந்தியா – மாலத்தீவு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சீனாவிற்கு இடி விழுந்தது போல ஆகிவிட்டது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..