ஒன்றிய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி…?
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது கட்டி முடிக்கப்படும்..? என ஒன்றிய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியிருக்கிறது.
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் மற்றும் வழக்கறிஞர் நரேந்திர குமார் வர்மா கடந்த ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி மதுரை உச்சநீதி மன்றத்தில்., தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், மதுரை தோப்பூர் உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்று ஒன்றிய அரசு கடந்த 2015 பிப்ரவரி 28- ஆம் தேதி அறிக்கவெளியிட்டிருந்தது ஆனால் தற்போது வரை அதற்கான எந்த பணியும் தொடங்கவில்லை மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது…
கொரோனா பொதுமுடக்கக் காலத்தால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் காலதாமதம் ஏற்பட்டதாக ஒன்றிய அரசு சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தை, நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. குறிப்பிட்ட காலத்துக்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி முடிக்கவேண்டும் என்று உத்தரவிடக்கோரி பாஸ்கர் என்பவர் பொது நலன் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு விசாரணைக்கு வந்த போது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது கட்டி முடிக்கப்படும் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மதுரையில் எய்ம்ஸ் அமையும் என அறிவிப்பு வெளியாகி 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. கடந்த 5 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்? எப்போது கட்டி முடிப்பீர்கள்? என சரமாரியாகக் கேள்வி எழுப்பியது.
இதனிடைபே மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும் கட்டுமானப் பணிகள் 2026-ஆம் ஆண்டுக்குள் முடிந்துவிடும் என்று ஒன்றிய அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, விரிவான அறிக்கையை ஒன்றிய சுகாதாரத் துறை செயலாளர் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..