இன்று மாலை 6 மணி அளவில் திருவண்ணாமலை கோவிலில் மஹாதீபம் ஏற்றப்பட்டது. இதனை கோவிலில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வருடந்தோறும் கார்த்திகை மாதத்தை முன்னிட்டு திருவண்ணாமலை கோவிலில் மகாதீபம் ஏற்றி பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அருணாச்சலேஸ்வரர் மகாதீபம் ஏற்றப்பட்டது. 2668 அடி உயர மலை உச்சத்தில் தீபம் ஏற்றப்பட்டது. செம்பினாலான 6 அடி உயர கொப்பரையில் 3500 கிலோ நெயில், 1000 மீட்டர் காடாத்துணியிலான திரியில் தீபம் ஏற்றப்பட்டுள்ளது.
இந்த தீபம் 11 நாட்களுக்கு மஹா தீபம் காட்சியளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இந்த திருவிழாவில் மக்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பிற்காக நியமிக்கபட்டனர். மேலும் இந்த விழாவில் இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.