கேரளா முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் திடீர் துப்பாக்கி சூடு சத்தம் கேட்டது. இதனால் பாதுகாப்பில் இருந்த காவல் துறையினர் மற்றும் முதல்வர் இல்லமே பரபரப்பானது.
முதல்வர் விஜயன் அதிகார்வபூர்வ இல்லத்தில் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டிருந்த காவல் அதிகாரி ஒருவர் தனது துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்த போது திடீரெனெ கை தவறி துப்பாக்கி வெடித்துள்ளது. இதனால் முதல்வர் இல்லம் முழுவதும் பயங்கரமான சத்தம் ஏற்பட்டுள்ளது. பயங்கர சத்தத்தால் முதல்வர் இல்லமே பரப்பானது.
இதுகுறித்து அருங்காட்சியக காவல்துறை விசாரணை நடத்திய போது, பணியில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரி துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது தவறுதலாக கைபட்டதால் துப்பாக்கி வெடித்துள்ளது மேலும் வெடித்த அந்த குண்டு தரையை நோக்கி பாய்ந்ததால் இந்த நிகழ்வால் யாரும் எந்த காயங்கள் ஏற்படவில்லை என்று விசாரணையில் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நடைபெறுகையில், முதல்வர் விஜயன் வீட்டில் இல்லை என்றும் வேறு யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் முதல்வர் வீட்டில் ஏற்பட்ட இந்த விபத்தால் அந்த பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது.