நீண்ட இடைவெளிக்கு பிறகு வைகைபுயல் வடிவேலு நடித்து திரைக்கு நாய் சேகர் திரைப்படம் வர உள்ளது. இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளில் அப்படக்குழு ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், நடிகர் வடிவேலு தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.
நடிகர் வடிவேலு நடித்துள்ள நாய் சேகர் படம் மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியாகவுள்ளதால் ரசிகர்களிடம் இந்த படம் தனி கவனத்தை பெற்றுள்ளது. இந்த படத்தில் பாடல் ஒன்றை வடிவேலு பாடியுள்ளார் அந்த பாடலுக்கு நடன இயக்குனராக பிரபு தேவா பணியாற்றினார். பிரபு தேவா வடிவேலு காம்பினேஷன் என்றாலே அதற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த பாடலை பற்றி பேசிய போது நடிகர் வடிவேலு சுவாரஸ்ய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அந்த பேட்டியில் வடிவேலு பேசுகையில், அப்பத்தா பாடலுக்காக நாங்கள் பிரபு தேவாவை அணுகினோம் அதற்கு அவர் நான் பண்ணாமல் யார் பண்ணுவா என்று கூறி எங்கள் கோரிக்கையை ஏற்று அப்பாடலுக்கு நடன இயக்குனரானார் இந்த பாடலுக்கு 4 நாட்களாக வேலை செய்தோம் மேலும் இந்த பாடலுக்கு அவர் சம்பளம் ஏதும் வாங்கிக்கொள்ளவில்லை என்று அவர் அந்த பேட்டியில் அவர் கூறினார்.