100 ஆண்டுகள் பழமைவாய்ந்த திருப்பத்தூர் கதவாலம் சீனிவாச பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம்..!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கதவாலம் பகுதியில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த அருள்மிகு சீனிவாச பெருமாள் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள்கலந்து கொண்டனர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கதவாளம் பகுதியில் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீபத்மாவதி தாயார் சமேத ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை ஒட்டிகடந்த சனிக்கிழமை அணுக்கை வாசுதேவ புண்யானம் கணபதி பூஜை நடைபெற்றது.
இதை அடுத்து இன்று காலைசதீஷ் தான அர்ச்சனை உபநய வேத பாராயணம் நான்காம் கால யாக ஹோமமும் நடைபெற்றது அடுத்து கலசங்கள் புறப்பாடு மேளதாளங்களுடன் புறப்பாடு நடைபெற்றது.
இதில் ஸ்ரீலஸ்ரீ மகாதேவ மலை சித்தர் கலந்து கொண்டு கலசங்களுக்கு தண்ணீர் ஊற்றி பூஜை செய்தார் மேலும் இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்