விநாயகர் சிலையை கடத்திய கடத்தல் கும்பல்..! சிக்கியவர்களுக்கு பூஜை கொடுத்த பொது மக்கள்..!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற தீர்த்தமலை கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் நேற்று நள்ளிரவு புகுந்த 4 பேர் கொண்ட கும்பல் அங்குள்ள விநாயகர் கோவிலில் உள்ள சிலையை கொள்ளையடித்து கொண்டு பின்னர் வழியில் கோழியையும் திருடிக்கொண்டு காரில் தப்பித்து செல்ல முயன்றுள்ளனர்.
அப்போது சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் விழித்து கொண்டு கோழியை திருடி கொண்டு காரில் சென்றவர்களை மடக்கி பிடித்து பார்த்த போது காரில் ஒரு விநாயகர் சிலை இருந்தது கண்டறியப்பட்டது.
உடனடியாக போலீசாரை வரவழைத்து போலிசாரிடம் காருடன் 4 பேரையும் ஒபப்டைதனர். போலிசார் விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் அனைகட்டு பகுதியை சேர்ந்த ஏழுமலை, சுரேஷ், பிரகாசம், செல்வம் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் 4 பேரிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post