உலக அரங்கில் இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த நபர்களில் முக்கியமானவர் தமிழகத்தை சேர்ந்த கூகிள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை. இவருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் விருதை அளித்து பெருமைபடுத்தியுள்ளது.
2022ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் கடந்த ஜனவரி மாதம் இந்திய அரசு அறிவித்திருந்தது. இந்த ஆண்டில் 4 பத்ம விபூஷண் 17 பத்ம பூஷன் மற்றும் 117 நபர்களுக்கு 117 பத்ம ஸ்ரீ விருதுகளும் அறிவித்தது. விருது வழங்கும் விழாவில் சுந்தர் பிச்சையால் நேரில் பங்கு பெறாத நிலை ஏற்பட்டது இதனால் இப்போது அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தரன்ஜித் சிங் விருதை சுந்தர் பிச்சையிடம் ஒப்படைத்தார்.
இது குறித்து சுந்தர் பிச்சை கூறுகையில், நான் எங்கு சென்றாலும் என் நாட்டின் அடையாளத்தை சுமந்து செல்கிறேன் இந்தியா நாடு என்னுடன் ஒரு பகுதியாக இருக்கிறது என்னை உருவாக்கிய தேசத்திடம் இருந்து எனக்கு இந்த விருது கிடைத்துள்ளது. எனக்கு மிகப்பெரிய கவுரவத்தை சேர்த்துள்ளீர்கள் இந்தியா அரசுக்கும் இந்தியா மக்களுக்கும் நன்றி தெரிவித்து கொல்கிறேன்னு என்றும் மேலும் என்னுடைய பயணத்திற்காக என்னுடைய பெற்றோருக்கு பெரும் தியாகங்களை செய்துள்ளனர் அந்த குடும்பத்தில் பிறந்ததற்கு அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன் என்று கூறினார்.
இதுகுறித்து அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தரன்ஜித் சிங் கூறுகையில், சுந்தர் பிச்சையிடம் விருதை ஒப்படைத்ததில் மகிழ்ச்சியாக உணர்கிறேன் இந்தியா-அமெரிக்கா பொருளாதாரம் & தொழில்நுட்பத்தை வலுப்படுத்த மதுரையில் பிறந்து மவுண்டன் வியூ வரையிலான அவரின் பயணத்தை அனைவரும் உத்வேகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், உலகளாவிய கண்டுபிடிப்புகளில் இந்தியாவின் பங்கினை மீண்டும் உறுதிசெய்துள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.