அமைச்சர் ரகுபதி செய்தியாளர் சந்திப்பில் இந்தியாவுக்கே முன் மாதிரி சட்டத்தை இயற்றியுள்ளோம் என்று ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை பற்றி தெரிவித்துள்ளார். மேலும் அவசர சட்டத்திற்கு அரசாணை வெளியிடாததில் எந்த தவறும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் ரம்மி தடை மசோதா பெரும் பேச்சு பொருளாக மாறியுள்ளது இந்நிலையில் செய்தியாளராகளை அமைச்சர் ரகுபதி இன்று சந்தித்தார் அதில், அவசர சட்டம் கொண்டு வந்துசட்டசபையில் உடனடியாக அதனை நிறைவேற்றியுள்ளோம், அவசர சட்டத்திற்கு அரசாணை வெளியிடாததில் எந்த தவறும் இல்லை என்றும் அஆளுனரிடம் அரசாணை வெளியிடாததற்கு காரணத்தை தெரிவித்துளோம் என்றும் தெரிவித்தார்.
மேலும், ஆளுநர் தரப்பில் இருந்து எந்த கேள்விகள் கேட்டாலும் பதிலளிக்க தயாராக இருப்பதாகவும் இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை மட்டுமின்றி அதற்கான ஒழுங்கு முறைகளையும் கொண்டு வர உள்ளது. என்றும்,இந்தியாவிற்கே முன் மாதிரியாக ஒரு சட்டத்தை இயற்றியுள்ளோம் இதற்கான ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்கவும் வலியுறுத்தி இருப்பதாக அவர் கூறினார்.