அனைவருக்கும் பிடித்த ஃபலூடா இனி வீட்டிலே செய்யலாம்…!
அனைவருக்கும் பிடித்தமான ஒரு வகை ஃபலூடா. இது கோடைக்காலங்களில் அதிகமாக விற்பனை ஆகும் ஒன்று. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு பொருள் ஃபலூடா.
இது பால், ஐஸ்கீரிம், ரோஸ் சிரப், சேமியா, சப்ஜா விதைகள், உலர் திராட்சை, பாதாம், முந்திரி ஆகியவற்றை பயன்படுத்தி தயாரிக்கப்படுவது இதை சாப்பிடுவது அவ்வளவு சுவையாக இருக்கும்.
ஃபலூடாவை எப்படி வீட்டில் இருந்தே தயாரிக்கலாம்னு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சியா சீட்ஸ் – 3 ஸ்பூன்
ஐஸ் நூடல்ஸ் – 3 ஸ்பூன்
உலர் திராட்சை சிறிது
பாதாம் சிறிது
ஐஸ்கீரிம் ஒரு கப்
பழங்கள் நறுக்கியது
காய்ச்சிய பால் – 1/4 டம்ளர்
செய்முறை:
-
ஒரு டம்ளரில் தேவையான அளவு ரோஸ் சிரப்பை ஊற்றிக் கொள்ளவும்
-
பின் அத்துடன் ஊறவைத்த சப்ஜா விதைகள், வேகவைத்த சேமியா கலந்து வைக்கவும்.
-
அதற்கு மேல் ஐஸ்கீரிம், உலர் திராட்சை, நறுக்கிய முந்திரி மற்றும் பாதாம், விரும்பிய பழ வகைகள் நறுக்கியது ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து கொள்ள வேண்டும்.
-
காய்ச்சிய பால் சிறிது சேர்த்து கொள்ளலாம். அவ்வளவு தான் சுவையான ஃபலூடா தயார்.