காதலி கண்முன்னே இறந்த காதலன்..! கைதான தாய்மாமன்..!!
கோயம்புத்தூர் மாவட்டம் சுந்தராபுரத்தை சேர்ந்த பிரஷாந்த்க்கும் அதே பகுதியை சேர்ந்த காயத்திரி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது ) என்ற பெண்ணும் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதலிப்பது இருவரின் வீட்டிற்கும் தெரியுமாம்.
காதலியின் பிறந்த நாளன்று.., வாழ்த்துக்கள் சொல்வதற்காக 12 மணிக்கு காதலி வீட்டிற்கு சென்று பரிசு கொடுத்து வாழ்த்துக்கள் சொல்ல இருந்துள்ளார் பிரஷாந்த். இதற்கு இடையில் உடன் இருந்த நண்பர்கள் மதுகுடிக்க அழைத்து சென்று.., குடிக்க வைத்துள்ளனர்.
மதுபோதையில் இருந்த பிரஷாந்த், நள்ளிரவு 12 மணியளவில் காதலி வீட்டிற்கு சென்று சுவர் ஏறி குதித்து கதவை தட்டியுள்ளார். கதவை திறக்காததால் காதலியின் பெயரை சொல்லி.., சத்தம் போட்டு அழைத்துள்ளார்.
சத்தம் கேட்டு வெளியே வந்த காதலியின் தாய்மாமன் விக்னேஷ், இப்பொழுது நீங்கள் மதுபோதையில் இருக்கீறிர்கள் காலையில் வாருங்கள், என்று சொல்லியுள்ளார்.
காதலை பார்க்க விடாமல் தடுத்ததால், காதலியின் தாய்மாமனை அவதூறாக பேசியுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. எவ்வளவு சொல்லியும் பிரஷாந்த் கேட்காததால் ஆத்திரமடைந்த விக்னேஷ். பிரஷாந்தை அரிவாளால் வெட்டியுள்ளார்.
சம்பவ இடத்திலேயே பிரஷாந்த் உயிர் இழந்தார், தகவலின் பெயரில் வந்த போலீசார் விக்னேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.