களக்காடு யாருக்கு சொந்தம்..? தமிழக அரசு சொன்ன பதில்..?
அரிசிக்கொம்பன் யானையை வனப்பகுதியினர் களக்காடு காட்டுக்குள்ளே விட்டு இருக்கின்றனர். இதை எதிர்த்து பழங்குடியின மக்கள் பாபநாசம் சோதனை சாவடியில்.., ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இனி காட்டிற்குள் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை, நாங்கள் எப்படி வசிப்பது என்று தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு தமிழக அரசு இந்த 21ம் நூற்றாண்டில் நீங்கள் ஏன் இன்னும் காட்டுக்குள்ளே இருக்க வேண்டும். காடு என்பது மிருகங்களுக்கு சொந்தமா? அல்லது உங்களுக்கு சொந்தமா ? யானை களை காட்டிற்குள்ளே விடக் கூடாது என சொல்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது.
தமிழக அரசே பழங்குடியினரை.., மலை பகுதியில் இருந்து நகர பகுதியில் வாழ, வலி வகுக்கிறது. அவர்களுக்கு என்று பல திட்டங்களையும் கொண்டுவந்துள்ளது. எனவே நீங்கள் நகர்வாழ் பகுதியில் வந்து குடியமர்ந்து காடுகளை விட்டு வெளியேறுங்கள்.
இப்படியே போனால் மேற்கு தொடர்ச்சிமலைகளை பாதுகாக்க முடியாமல் போய்விடும்.
Discussion about this post