காதல் தோல்வி.? மருத்துவ மாணவி தற்கொலை..!
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் காஞ்சிபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். இவருக்கும் அதே கல்லூரியில் படித்து வந்த சகமாணவன் ஒருவருக்கும் காதல் இருந்து வந்துள்ளது.
ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கருத்து வேறுப்பாடு காரணமாக இருவரும் பிரிந்துள்ளனர். இந்த காதல் தோழ்வியின் காரணமாக மன அழுத்தத்தில் இருந்த மருத்துவ மாணவி அதற்காக சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று இரவு மருத்துவமனையின் 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
படுகாயமடைந்த மாணவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மாணவியின் தற்கொலை குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.