ADVERTISEMENT
கோவில்பட்டி அருகே ஆவின்பால் பாக்கெட்டுகளில் புழுக்கள் பொதுமக்கள் அதிர்ச்சி!!!
கோவில்பட்டி அருகே ஆவின்பால் பாக்கெட்டுகளில் புழுக்கள் இருப்பதால் ஆவின்பால் நிறுவனத்தின் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கங்கன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் லூர்துசாமி கவிதா, அந்த பகுதியில் உள்ள ஆவின் வணிக நிறுவனத்தில ஆவின்பால் பாக்கெட் வாங்கியுள்ளார் .
அந்த பாலை சூடேற்றுவதற்கு பாத்திரத்தில் ஊற்றும் போது அந்த பாலில் புழு ஒன்று மிதந்துள்ளது இதனை கண்டு அதிர்சியடைந்த கவிதா புழு இருந்த பாலை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளார்.
இதுகுறித்து கவிதா கூறுகையில், இதனை போன்று புழுக்கள் உள்ள பாலை குழந்தைகளுக்கு வழங்கும் போது பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், எனவே தமிழக அரசு பொதுமக்களுக்கு வழங்கும் ஆவின் பாலை தரமாகவும் சுகாதாரமாகவும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.