வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்….
வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. இதில் ஜோஷி , சேகர், தீனதயாளன்உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பட்டதாரி அல்லாத அலுவலர்கள் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையை உடனே வெளியிட வேண்டும், மேலும் இளநிலை வருவாய் ஆய்வாளர் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையை உடனே வெளியிட வேண்டும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் திரளான வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
