வியாழன்கிழமை இறைவன் வழிபாடு..!!
கடந்த சில தினங்களாக இறைவன் வழிபாடு பற்றியும், வழிபாட்டு தெய்வங்கள் பற்றியும் பார்த்துக்கொண்டு வருகிறோம், அதில் இன்று நாம் தெரிந்துக்கொள்ள இருப்பது, சாய்பாபா வழிபாடு.
வியாழன்கிழமை சாய்பாபாவிற்கு சிறந்த நாள்.., வாரந்தோறும் சாய்பாபா விற்கு விரதம் இருந்து, அதாவது காலை முதல் மாலை 6 மணி வரை எதுவும் சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும். நீர் ஆகாரம் எடுத்துக்கொள்ளலாம்.
தொடர்ந்து 7, 9 அல்லது 11 வாரங்கள் இந்த விரதத்தை கடைபிடிக்கலாம். எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்து மாலை சாய்பாபா கோவிலுக்கு சென்று பிரார்தனை செய்து வழிபாட்டால், மனதில் நினைத்த காரியம் நிச்சயம் நிறைவேறும்.
சில பெண்களுக்கு இந்த சமயத்தில் மாதவிடாய் ஏற்பட்டால் விரதம் இருந்து மனதார.., பாபாவை நினைத்தால் போதும், மாதவிடாய் சமயத்தில் கோவிலுக்கு செல்லவேண்டும் என்ற அவசியம் இல்லை. விரதம் கடைப்பிடிப்பது சிறந்த பலனை தரும்.
விரதம் கடைபிடிக்க முடியாதவர்கள்.., ஆரம்பத்திலேயே விரதம் இல்லாமல் இருந்து விடலாம். முறையான விரதம் தான் என்றும் பலன் தரும்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..