இனி மீன் வாங்கும் போது இதை பாத்துவாங்குங்க…!! இல்லைனா..!!
மீன் வாங்கும் போது எப்படி பார்த்து வாங்கணும்னு இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க
மீனில் புரதம் ஆரோக்கியமான கொழுப்புகள் கால்சியம் செலினியம் மற்றும் வைட்டமின் பி12 நிறைந்திருக்கு. மேலும் இதயம் எலும்பு மற்றும் மூளை ஆரோக்கியத்திற்கு சிறந்த உணவாக இருக்கிறது.
ஆனால் மழைக்காலத்தில் கடல்கள் ஆறுகள் குளங்கள் போன்ற நீர் நிலைகளில் கழிவு நீர் கலப்பால் பல்வேறு வகையான பாக்டீரியாக்கள் வைரஸ்கள் இருக்கும் என்று சொல்லுறாங்க. நீர்நிலைகளில் வைரஸ்கள் பாக்டீரியாக்கள் இருக்கும் என்பதால் மீன் போன்ற கடல் உணவுகளை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
மழைக்காலம் தான் மீன்களின் இனப்பெருக்க காலம் என்பதால் மீனுடன் அதன் முட்டையும் சேர்த்து சாப்பிட நேரிடும். இது வயிற்று தொடர்பான பிரச்சனைகளை உண்டாக்கு கூடும் என்று சொல்லப்படுது.
ஆனால் மீன்களை பிரஷ் ஆக வாங்கினால் உடல் உபாதை ஏற்படுவதில் இருந்து தப்பிக்கலாம். இதனால் அதை வாங்கும் முன் பரிசோதனை செய்வது அவசியமாகும். மீன்கள் வாங்கும்போது கடலின் உப்பு வாசனை இருக்க வேண்டும் அதற்கு மாறாக நாற்றம் அடித்தால் அதை தவிர்க்கவும்.
மீனின் சதையில் விரலைக் கொண்டு அழுத்தும் போது திடமாக இருக்க வேண்டும். மீனின் கண்கள் மயங்கிய நிலையில் அல்லது குழி விழுந்தோ இருந்தால் கெட்டுப் போனதாக இருக்கக்கூடும்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..