சனாதனத்தின் கொடூரத்தின் சிறிய வரலாற்றைப் பார்ப்போம்…
கேரளாவில் மார்பை மறைக்க தடை விதிக்கப்பட்ட 18 சாதிகள் பட்டியல்..
அன்றைய திருவாங்கூர் சமாஸ்தானத்தின் ராஜா ஆட்சியில் தோழ் சேலை அணிய தடை விதிக்கப்பட்ட 18 சாதிகள்:
1) குயவர் ( மண்பாண்டம் தொழில் சாதியினர் )
2) சாணார் ( நாடார்) மரம் ஏறும் தொழில் சாதியினர்
3) கருமறவர் மற்றும் செங்கோட்டை மறவர் சாதியினர் ( தேவர் )
4) துலுக்கப்பட்டர் ( மாப்பிள்ளை ) சாதியினர்
5) இடையர் ( கோணர் )
6) நாவீதர் ( முடி திருத்தம்) சாதியினர்
7) வண்னார் ( சலவை தொழில்) சாதியினர்.
8) சக்கிலியர் ( துப்புரவு தொழில்) சாதியினர்
9) பறையர் ( பறையடிக்கும் தொழில்) சாதியினர்
10) நசுரானியர் ( சிரியன் கிறிஸ்தவர்) சாதியினர்
11) குறவர் ( கூடை முடைதல்) சாதியினர்
12) வாணியர் ( வாணிய செட்டியார்) சாதியினர்
13) ஈழவர் , தீயர் ( இல்லத்து பிள்ளைமார் ) மற்றும் அந்த சாதியோடு தொடர்புடைய மற்றும் போர் தொழில் செய்த தீயர் சாதியினர்
14) பாணர் ( ஆடல், பாடலுடன் கூடிய கலைத் தொழில்) சாதியினர்.
15) புலையர் ( பறையருள் ஒர் உட்சாதி வேட்டைத் தொழில்) சாதியினர்
16) கம்மாளர் ( ஆசாரி) கைவினை தொழில் சாதியினர்
17) கைக்கோளர் ( முதலியார்) சாதியினர்.
18) பரவர் ( முத்தரையர்) சாதியினர்.
தோள் சீலைப் போராட்டம் ஓங்கி வந்த நிலையில் இந்து மதத்தில் இருந்தால் தான் இவ்வளவு அடிமை என ஆயிரக்கணக்கானோர் கிறித்தவ மாதத்திற்கு மாறினர். இதனால் தான் கேரளாவில் அதிக அளவில் கிறித்தவர்களை பார்க்கலாம். நம்முடைய நாகர்கோவில் மாவட்டத்தில் தான் இந்த அடிமைத்தனம் அதிகப்படியாக நடந்தது குறிப்பிடத்தக்கது.
மேலே குறிப்பிட்டுள்ள சாதியினர்கள் சனாதனம் தலை விரித்தாடும் போது , சனாதினிகள் இவர்களுக்கு குலத் தொழிலை செய்ய நிர்பந்தித்தார்களோ ? அதே தொழிலைதான் சனாதன ஒன்றிய பா.ஜ.க அரசு இப்போது ” விஸ்வகர்மா யோஜன ” திட்டத்தை அறிவித்து அவர்களுக்கான குலத் தொழிலை ஊக்குவிப்போம் என அறிவுத்திருக்கிறது..
மீண்டும் அனைவருக்குமான கல்வியை மறுத்து , முன்னேற விடாமல் இருப்பதற்கு , இந்த மாதிரியான சனாதன திட்டத்தை அறிவித்திருக்கிறது சனாதன ஒன்றிய பா.ஜ.க அரசு……
அதனால்தான் சனாதனத்தை ஒழிப்போம் ஓங்காரமாக குரல் ஒலிக்கிறது…
ஒலிக்கட்டும் …
Discussion about this post