ரயில் நிலையங்களில் அவசர நிலைக்கு உயிர்காக்கும் மருந்துகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் வைக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் அதிவிரைவு டீசலுக்கு ரயில்வே செலவிடும் தொகை குறைந்துள்ளதாக ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார்.
அதிவிரைவு டீசலுக்கு ரயில்வே செலவிடும் தொகை ரூ.4,939 கோடி குறைந்துள்ளதாக அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார். கடந்த 2019 மற்றும் 2020ம் ஆண்டின் அதிவிரைவு டீசலுக்காக ரூ.16,377 கோடி செலவிடபட்டுள்ளதாகவும், கடந்த 2020-2021ம் நிதி ஆண்டில் 11,438 கோடி ருபாய் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் இதனால் செலவிடும் தொகை ரூ.4,939 கோடி குறைந்துள்ளதாக ரயில்வே அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும் ரயில் நிலையங்களில் உயிர்காக்கும் மருந்துகளும், ஆக்சிஜன் சிலிண்டர்களையும் பொருத்தப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. உயிர்காக்கும் மருந்துகளும், ஆக்சிஜன் சிலிண்டர்களை பயன்படுத்த டிக்கெட் பரிசோதனை செய்யும் பணியாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெய்வத்துள்ளது.