வரும் பொங்கல் அன்று விஜயின் வாரிசு படமும் அஜித்தின் துணிவு படங்களும் ஒன்றாக வெளியாகவுள்ள நிலையில் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தமிழ்நாட்டில் விஜய் தான் நம்பர் 1 நடிகர் அவருக்கு அடுத்து தான் அஜித் இருக்கிறார் என்று பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.
தமிழ்நாட்டின் இரு பெரும் நடிகர்களான விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவர்களின் படங்களும் ஒன்றாக பொங்கல் அன்று வெளியாகவுள்ளது. 8 ஆண்டுகள் கழித்து இவர்களின் படங்கள் மோத உள்ளதாலும் இந்த இருபடங்களின் அப்டேட்களும் அவ்வப்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இரு பெரும் நடிகர்களின் படங்கள் வெளியாகவுள்ளதால் தியேட்டர்கள் ஒதுக்குவதில் பிரச்சனைகள் இருக்கும் என்று கூறப்பட்டு வந்தது. துணிவு படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜியான்ட் நிறுவனம் வெளியிடவுள்ளதால் துணிவு படத்திற்கே அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என்று பேசப்பட்டு வந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் இருபடங்களுக்கும் சமளவு தியேட்டர்கள் பகிரப்படும் என்று கூறினார்.
இந்நிலையில் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு தெலுகு பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டி தற்போது சர்ச்சாகியுள்ளது.
அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் விஜய் தான் நம்பர் 1 அவருக்கு அடுத்துதான் அஜித் இருக்கிறார். இரண்டு படங்களுக்கும் தலா 400 திரையரங்குகள் ஒதுக்குவது சரியாக இருக்காது. அதனால் சம அளவு தியேட்டர்கள் பிரிப்பதை குறித்து உதயநிதி ஸ்டாலினிடம் பேசவுள்ளோம் இது அனைத்தும் வியாபாரம் தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.