“இடஒதுக்கீட்டுச் சுவரை உடைப்போம்..” ராகுல் காந்தி பதிவு..!
காங்கிரஸ் மூத்த தலைவரும்., நாடாளுமன்றத்தின் நாடாளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி. ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்தும் பாஜக குறித்தும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்..
இதுக்குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது.. பிரதமர்
மோடியின் ஜாதிவாரி கணக்கெடுப்பானது தெலுங்கானாவில் இன்று முதல் தொடங்கியுள்ளது.
அதிலிருந்து பெறப்படும் தரவுகளைப் பயன்படுத்தி மாநிலத்தின் ஒவ்வொரு பிரிவினரின் வளர்ச்சிக்கும் கொள்கைகளை வகுப்போம்.
விரைவில் இது மகாராஷ்டிராவிலும் நடக்கும். நாட்டில் விரிவான ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த பாஜக விரும்பவில்லை என்பது அனைவரும் அறிந்ததே.
மோடிஜியிடம் நான் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன்- நாடு முழுவதும் சாதிவாரிக் கணக்கெடுப்பை உங்களால் தடுக்க முடியாது. இந்த நாடாளுமன்றத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நிறைவேற்றி, 50% இடஒதுக்கீட்டுச் சுவரை உடைப்போம்… என இவ்வாறே அவர் பதிவிட்டுள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..