அடல் பிஹாரி வாஜ்பாய் சிலைக்கு தலைவர்கள் மரியாதை..!!
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு தினத்தையொட்டி பல்வேறு கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 6 ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி தில்லியிலுள்ள சதைவ் அடல் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர் ஜெபி நட்டா, ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ராஜ்நாத் சிங், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதனிடையே வாஜ்பாயின் 6 ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு தினத்தில் அவருக்கு அஞ்சலிகள் எனவும் நாட்டை முன்னேற்றியதில் அவர் ஆற்றிய ஈடுஇணையற்ற பங்களிப்பிற்காக மக்களால் நினைவுகூரப்படுவதாக தெரிவித்துள்ளார்
மேலும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதில் அவர் தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்ததாகவும் இந்தியாவுக்கான அவருடைய தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற நாம் தொடர்ந்து பாடுபடுவோம் எனவும் பதிவிட்டுள்ளார்