ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு தலைவர்கள் வாழ்த்து..!!
ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு பிரதமர் மோடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,ஜார்க்கண்ட் முதல்வர் ஸ்ரீ ஹேமந்த் சோரன் ஜி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனவும் அவரது நீண்ட ஆயுளுக்கும், அற்புதமான ஆரோக்கியத்திற்கும் பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், பல தடைகள் வந்தாலும் மக்களின் உரிமைக்கு போராடும் உத்வேகத்தை அசைக்க முடியாது என நிரூபித்தவர் ஹேமந்த் சோரன் எனவும் குறையாத வலிமையுடனும் அர்ப்பணிப்புடனும் தொடர்ந்து முன்னேற ஹேமந்த் சோரனுக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
அதே போல் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில்,ர்க்கண்ட் முதல்வர் ஸ்ரீ ஹேமந்த் சோரன் ஜிக்கு அவரது பிறந்தநாளில் மனமார்ந்த வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார். மேலும் நாட்டின் ஏழைகள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரின் உரிமைகளுக்கான போராட்டத்தில், அவர்களுக்கு இழைக்கப்படும் ஒவ்வொரு அநீதிக்கும் எதிராக, இந்தியா வலுவாகப் போராடும், ஒன்றாக நாம் வெற்றி பெறுவோம் என்றும் தெரிவித்துள்ளார்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..