அவிநாசி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்..!
அவிநாசி திருமுருகன் பூண்டி அவிநாசி நகராட்சி விஜீவி ஸ்ரீகார்டனில் உள்ள வெற்றி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 22ம் தேதி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலசக்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அபிஷேகம் செய்துள்ளனர்.
கலச கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, இன்று காலை பல பக்தர்கள் பால்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து வழிபட்டனர். இதனை தொடர்ந்து 108 யாக பூஜைகள் நடத்தப்பட்டன. அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துக் கொண்டு சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து இணைந்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி.