பந்தலூர் முத்துமாரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்..
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் கிராமத்தில் முது மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் மே 22ம் தேதி நடைபெற்றது. 22ம் தேதி காலை மகா கணபதி ஹோமத்துடன். பந்தக்கால் நட்டு, காப்புக் கட்டி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காப்பு கட்டுதலை தொடர்ந்து பால்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.
இந்த பூஜைகள் அனைத்தும் விக்னேஷ் சிவாசாரியார் தலைமையில் நடைபெற்றது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து இணைந்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி
Discussion about this post