ஆயிரம்வில்லி பகவதி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் கொண்டாட்டம்
கூடலூர் மாவட்டம் புளியம்பாறை கிராமத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆயிரம்வில்லி பகவதி அம்மன் கோவில் திருவிழா தொடங்கியது.
விழா தொடக்கத்திலேயே கடந்த 22ம் தேதி காலை கணபதி பூஜையுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து இன்று காலை கணபதி ஹோமம் நடைப்பெற்றது. கணபதி ஹோமத்தை தொடர்ந்து, கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.
இந்த விழா வாசுதேவன் நம்பூதிரி தலைமையில் நடைபெற்றது. மேலும் அந்த ஊர் மக்களின் செழிப்பிற்காக பிம்ப கலாசாதிகள், பிரம்ம வஹானம் போன்ற பூஜைகள் நடைப்பெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவில் கோபுரத்தில் ஊற்றப்படும் கலச தண்ணீரை எடுத்து வந்து, வீட்டில் தெளித்தால் செல்வம் செழிக்கும் என்பது அந்த ஊர் மக்களின் அபாரநம்பிக்கையாக இருக்கிறது.
ஏராளமான பக்தர்கள் கலசம் ஏந்தி ஊர்வலம் வந்துள்ளனர். அந்த கலச தண்ணீர் தான், கோவில் கோபுரத்தில் அபிஷேகம் செய்யப்பட்டுள்ளது.