புதன் கிழமை விநாயகர் வழிபாடு..!
புதன் கிழமை விநாயகருக்கு உகுந்த நாளாக கருதப்படுகிறது. காரணம் விநாயகர் பிறந்த போது, புதன் பகவான் கைலாயத்தில் இருந்துள்ளார். எனவே விநாயகரை புதன் கிழமை அன்று வழிபட்டால், புதன் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
அனைத்து கடவுள்களிலும் முதன்மை கடவுள் “விநாயகர்“. சிவபெருமான் திரபாசுரனை அழிக்காமல் விட்ட பின் அதற்கான காரணம் குறித்து யோசித்துள்ளார். பின் சண்டைக்கு முன் விநாயகரை வழிபடாதது காரணமாக இருக்குமோ என நினைத்து.
அதற்கு பின் நடக்க இருந்த போரில் விநாயகரை வணங்கி சென்றுள்ளார். பின் போரில் திரிபா சூரணை தோற்கடித்து போரில் வெற்றி பெற்றார். இதனால் விநாயகரை வணங்கி விட்டு எந்த செயல் செய்தாலும் அது வெற்றியில் தான் முடியும் என்பது ஐதீகம்.
* வாரந்தோறும் புதன்கிழமை அன்று வன்னி மர இலைகளை வைத்து வழிபட்டால் அதிக புத்திசாலி தனமும், பலமும் கிடைக்குமாம்.
* புதன் கிழமை அன்று விநாயகரை வணங்கி விட்டு, கீரை சாப்பிட்டு வெளியே சென்றால் வேலையில் வெற்றி நிச்சயம்.
* விநாயகருக்கு இனிப்பு வைத்து வழிபட்டால் திருமண தடை விலகி, விரைவில் திருமணம் நடக்கும்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து இணைந்திடுங்கள்.