பணவரை அதிகரிக்க செய்யும் குபேர பூஜை..!!
உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடி வருகின்றனர்..
இன்றைய நாளில் புத்தாடை உடுத்தி., பட்டாசு வெடித்து இனிப்புகள் சாப்பிட்டு கொண்டாடி மகிழ்வோம்..
அப்படி மகிழும் இன்றைய நாளில் வீட்டில் குபேர பூஜை செய்தால் பண வரவு அதிகரிக்கும்., அப்படி பணவரவை அதிகரிக்க செய்யும் குபேர பூஜையை பற்றி பார்க்கலாம்..
இன்றைய நாளில் குபேரன் அவர்களுக்கு தீபம் ஏற்றி இனிப்பு பொருட்கள் நெய்வேதியமாக வைக்க வேண்டும்.
முக்கியமாக அருகம்புல்லை வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்ய வேண்டும்..
அதன் பின் கையில் குபேர முத்திரையை வைக்க வேண்டும்..
குபேர முத்திரை என்பது., கட்டைவிரல், ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் இந்த மூன்றையும் ஒன்றாக சேர்த்து வைக்க வேண்டும்..
அதன் பின் அருகம்புல்லை வைத்து “ஓம் குபேராய வசிய” என்ற இந்த மந்திரத்தை 1008 முறை உச்சரிக்க வேண்டும்.
அப்படி சொல்லி பீரோவில் வைத்தால்., பணவரவு அதிகரிக்கும்..