மின்சாரம் தாக்கி அரசு பேருந்து ஓட்டுநருக்கு நேர்ந்த சோகம்..!
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியை சேர்ந்த பிரதாப்(47), என்பவர் கோத்தகிரி அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.
இந்தநிலையில் இன்று காலை ஆக 16 வழக்கம் போல் பணிக்கு சென்ற இவர் கூட்டாடவிலிருத்து பயணிகளுடன் கோத்தகிரி நோக்கி வந்த கொண்டிருந்தார்.
அப்போது கோவில் மட்டம் பகுதியில் மின் கம்பி ஒன்று அறுந்த நிலையில் சாலையில் தொங்கிகொண்டிருந்தது. இதனை கண்ட ஓட்டுநர் பிரதாப் மின்கம்பியின் மீது பேருந்தை உரசாமல் இயக்க முயன்றபோது எதிர்பாரதவிதமாக மின்சாரம் பிரதாப் மீது பாய்ந்தது.
இதில் பேருந்தின் உள்ளேயே சுருண்டு விழுந்தார். இதனை கண்ட பயணிகள் கத்தி கூச்சலிட்டு பின்புற கதவு வாயிலாக இறங்கி உயிர் தப்பினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோத்தகிரி போலீசார் மின்சார வாரிய ஊழியர்கள் உதவியுடன் மின் இணைப்பைத் துண்டித்து ஓட்டுநர் பிரதாப்பை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகக் தெரிவித்தனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”