இனி பாதாம் பிஸ்கட் வீட்டிலே செய்யலாம்..!
தேவையான பொருட்கள்:
மைதா 1 கப்
சோடா மாவு 1/4 ஸ்பூன்
சோடா உப்பு 1/4 ஸ்பூன்
சர்க்கரை 2/3 கப்
முட்டை 1/2
பால் 1 ஸ்பூன்
பாதாம் சாறு 1 ஸ்பூன்
பாதாம் 8
வெண்ணெய் 1/4 கப்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சோடா உப்பு மற்றும் சோடா மாவு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.
பின் சர்க்கரையை கலந்து கொள்ள வேண்டும்.
ஒரு கிண்ணத்தில் முட்டை, பால், பாதாம் சாறு ஆகியவற்றை சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.
வெண்ணெயை உருக்கி மாவில் கலந்துக் கொள்ள வேண்டும்.
பின் மாவில் முட்டை கலவையை சேர்த்து நன்றாக சாஃப்டாக மாறும் வரை பிசைந்து கொள்ள வேண்டும்.
பின் இதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
இந்த உருண்டைகளை 20 நிமிடங்களுக்கு ஃபிரிஜ்ஜில் வைக்க வேண்டும்.
பின் உருண்டைகளை எடுத்து பிஸ்கட் வடிவில் தட்டிக் கொள்ள வேண்டும்.
உருட்டிய பிஸ்கட்டில் ஒரு பாதாம் வைக்கவும்.
பின் இதனை பேக்கிங் பேப்பரில் இடைவெளி விட்டு வைக்கவும்.
இந்த பிஸ்கட்டை 400F டிகிரி செல்சியஸில் 15 நிமிடங்களுக்கு பேக்கிங் செய்து எடுக்கவும்.
பின் பிஸ்கட்டை எடுத்து ஆறவைக்கவும்.
அவ்வளவுதான் மொறுமொறுவென பாதாம் பிஸ்கட் தயார்.
ஈசியா இனி வீட்டிலே ஹெல்தியான பிஸ்கட் செய்து குழந்தைகளுக்கு கொடுங்க விரும்பி சாப்பிடுவாங்க.