வேலூர் நீதிமன்றத்தில் ஆஜரான கதிர் ஆனந்த்..!
வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர் – வருமான வரி வழக்கில் வாரன்ட் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து வேலூர் கோர்ட்டில் ஆஜரானார்
வேலூர் மாவட்டம் வேலூர் திமுக எம்.பி. கதிர் ஆனந்த் கடந்த 2012 2013-ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டிய நிலையில் 2015 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி தாக்கல் செய்துள்ளனர்.
2016ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பிய பின், ஒரு கோடியை நான்கு லட்சத்து 94 ஆயிரத்து 60 ரூபாய் வருமான வரியை செலுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளனர், திமுக எம்.பி கதிர் ஆனந்துக்கு எதிராக வேலூர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி 2017 ஆம் ஆண்டு கதிர் ஆனந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கும், வரி செலுத்துவதற்கும் ஏற்பட்ட தாமதம் ஆனதால் அது தொடர்பாக வழக்கு தொடர முடியாது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது .
இந்த வழக்கில் வருமான வரிக் கணக்கை வேண்டுமென்றே தாமதமாக தாக்கல் செய்தாரா வேண்டுமென்றே தாமதமாக வருமான வரி செலுத்தினாரா என்பதை விசாரணை நீதிமன்றம் தான் முடிவெடுக்க முடியும் என்பதால், வேலூர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு விசாரணையில் தலையிட முடியாது எனக் கூறியுள்ளார்.
எனவே நீதிமன்றம் கதிர் ஆனந்த் மனுவை தள்ளுபடி செய்தது, இந்த வழக்கில் கடந்த 11ஆம் தேதி வேலூர் நீதிமன்றத்தில் எம்.பி கதிர் ஆனந்த் ஆஜராக வேண்டிய நிலையில், அவர் ஆஜராகவில்லை எனவே இன்று அவரை நேரில் ஆஜராக வேண்டுமென சம்மன் அனுப்பப்பட்டது. அதனால் எம்பி கதிர் ஆனந்த் வேலூர் நீதிமன்றம் வேலூர் நடுவர் நீதிமன்றம் ஒன்றில் ஆஜரானார்.
Discussion about this post