“காதல் ரோமியோ விஜய் ஆண்டனி” பிறந்தநாள்..!
பன்முகம் திறமைகளை கொண்டவர் தான் “விஜய் ஆண்டனி” இவர் இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர் என தன்னுடைய தனி திறமையால் மக்களிடம் ஒரு நல்ல பெயர் வாங்கியவர், பொதுவாகவே இவருடைய படங்கள் அனைத்தும் வித்தியாசமான கதைக்களம் என்றே சொல்லலாம், இவர் நடிப்பில் வந்த இந்தியா பாக்கிஸ் தான் படம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது என்றே சொல்லலாம்.
தன்னுடைய இன்னசென்ட் பாவனையால் பெண்களின் மனதில் புகுந்தவர், இவருடைய பேச்சும் இவரை போலையை இருக்கும் மிகவும் அமைதியாக, மரியாதையாக.பிச்சைக்காரன் என்ற ஒரு படம் பலரின் வாழ்க்கையில் அம்மாவின் முக்கியத்துவத்தை உணர்த்தியது என்றுதான் சொல்லவேண்டும்.
இப்போலாம் இருக்குற பசங்க அம்மாக்களை மதிக்கிறது என்பதே இல்லை,ஆனால் அவளோ பெரிய பணக்காரனாக இருக்கும் ஹீரோ தன்னுடைய அம்மாவை காப்பாற்றுவதற்கு பிச்சை எடுக்கும் காட்சி அனைவரின் மனதிலும் ஒரு பிம்பமாக மாறியது.அதை பார்த்தாவது இன்றய தலை முறையினர் கற்றுக்கொள்ளுங்கள்.
எத்தனை சாமிகள் உலகில் இருந்தாலும் அம்மவை போல் ஒரு சாமி இங்கேது, நீ எவளோ பெரிய பணக்காரனாக இருந்தாலும் சரி அம்மா பாசம் ஒன்றுக்கு அது ஈடாகுமா ?சில வீடுகளில் பெற்றோர்கள் இடையில் எத்தனயோ பிரச்சனைகள் இருந்தாலும், அந்த அம்மா நினைத்தாள் அந்த வாழ்க்கையை விட்டு வெளிய சென்றிருக்கலாம்.
ஆனால் எத்தனை துன்பங்களை அனுபவதித்தாலும் தன்னுடைய குழந்தைகளுக்கு அதை எல்லாம் சமாளித்து கொண்டு வாழ்ந்து கொண்டு இருப்பவள் தான் அம்மா.இந்த பாடலுக்கு இசையமைத்து, பாடலையும் பாடியிருப்பார் “விஜய் அன்டனி”.
நூறு சாமிகள்
இருந்தாலும் அம்மா
உன்னைப்போல் ஆகிடுமா..
கோடி கோடியாய் கொடுத்தாலும்
நீ தந்த அன்பு கிடைத்திடுமா..
ஒரு அப்பாவியான மருத்துவராக இருக்கும் நடிகர், பொருக்கி பசங்களிடம் இருந்து காப்பதும் சூப்பர் ஹீரோவாக மாறியிருப்பார் இந்த படத்தில் இந்த படத்தை சிலர் “மஸ்கரா போட்டு மயக்கிறேயே” பாடலுக்கவே நிறையபேர் பாத்திருப்பாங்க..?
நீ சிரித்து பேசுகின்ற வார்த்தைகளை நான் தினமும் கேட்க வேண்டும், எனக்கு உறவு என்று சொல்லுவதற்கு எவரும் இல்லை என்னுடைய உலகமாக நீ மாறவேண்டும்.இசையமைப்பாளர் விஜய் அன்டனி இசையமைக்க பாடகர்கள்,ஹேமச்சந்திரன், ஸ்ரீனிவாசன் மற்றும் சுப்ரியா ஜோஷி சேர்ந்து பாடிய பாடல்.
உன்னை கண்ட
நாள் முதல் என் தூக்கம்
போனது தூங்கினாலும்..
உன் முகம் என்னென்று
சொல்வது..
ஒரு அழகான காதல், மோதல் படமாக இருப்பதுதான் இந்த படம், இருவரும் ஒரே வேளையை மறைத்து விட்டு, ஒரே வீட்டில் இருக்கும் ஹீரோ, ஹீரோயின் அதனால் ஏற்படும் கலாட்டாக்கள் தான் இந்த படம். உலகில் பலகோடி பெண்கள் இருந்தாலும் உன்னை தேடிவந்து காதலித்தேன் உன்னை பார்த்த நாளில் இருந்து ஒரு மாறி ஆகிவிடடேன், ஆயிரம் ஆண்கள் ஊரில் இருந்தாலும் உன் முகம் மட்டும் என் கண்களில் இருக்கிறது இசையமைப்பாளர் தீனா தேவராஜன் இசையில் பாடகர்கள் நிவாஸ், வேதாள ஹேமச்சந்திரா,வந்தனா ஸ்ரீனிவாசன் பாடிய பாடல்.
பல கோடி பெண்களிலே
உனை தேடி காதலித்தேன்..
உனை பார்த்த நாளிருந்தே
ஒரு மாறி மாறி விட்டேன்..
பலவிதமான கனவுகளில் தன்னை பார்க்கும் ஹீரோ அதை உண்மை என அதை தேடி செல்கிறார் தன்னுடைய தந்தையை காண்பதற்காக. பணம் வாங்கியதற்காக பேத்தியை கூட்டி செல்லும் வில்லன் அவளை திருமணம் செய்து கொள்கிறான், பின்பு ஹீரோவிடம் பழகிறார். உன் நெற்றி முடி சுத்தும் பாம்பு போல் என்னை சீண்டி பக்குதடி இசையமைப்பாளர் விஜய் அன்டனி இசையில் பாடகர்கள் நிவாஸ் மற்றும் ஜானகி அய்யர் பாடிய பாடல் இது
அரும்பே அரும்பே
என்னை கடத்தி போ கரும்பே..
அழும்பே தழும்பே
உள்ள கெடத்தி போ குறும்பே..
இப்படி தன்னுடைய பலவிதமான திறமையால் இன்னும் மக்களை என்டர்டைன்மெண்ட் செய்வர் என்பதில் வித்தியாசியமே வேண்டாம், இன்று பிறந்தநாள் கொண்டாடும் விஜய் அன்டனிகு மதிமுகம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறறோம்.
இசையின் மூலம் நம்மை அதில் மயங்க வைத்து சினிமாவில் ஒரு ஹீரோவாக ரசிக்க வைத்து.., பல படங்கள் மூலம் சில கருத்துக்களை சொல்லி சிந்திக்க வைத்த “விஜய் ஆண்டனி” அவர்களுக்கு மதிமுகம் குடும்பத்தினர் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
– சரஸ்வதி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..