“கருணாநிதி நூற்றாண்டு நாணயம் வெளியீட்டு விழா” முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வந்த கடிதம்..!!
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று 100 நாணயம் வெளியிடப்பட்டது. நேற்று மாலை 6.50 மணிக்கு இந்த விழாவானது தொடங்கபட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கலைஞர் நூற்றாண்டு நாணயத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார்.
பிரதமர் மோடி கடிதம் :
இந்நிலையில் கலைஞர் கருணாநிதியை பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் எழுதியிருப்பதாவது.. “இந்திய அரசியலிலும் சரி இலக்கியத்திலும் மிக உயர்ந்த ஆளுமையாக திகழ்ந்தவர் கலைஞர் கருணாநிதி”.. அரசியலில் தனக்கென தனி இடத்தை மட்டுமல்ல முத்திரையையும் பதித்தார்.
கருணாநிதியின் இலக்கியம் மற்றும் அவரது படைப்புகள்., பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தியது இதனால் தான் அவருக்கு கலைஞர் என பெயர் சூட்டப்பட்டது., ஒரு அரசியல் தலைவராக சமூகம், கொள்கை மற்றும் அரசியல் பற்றிய ஆழமான புரிதலை கோடிட்டு காட்டி பலமுறை பணியாற்றியவர்.
கருணாநிதி இந்த நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிடப் பட்டிருப்பது கருணாநிதியின் நினைவையும் அவரால் நிலை நிறுத்தப்பட்ட லட்சியங்களையும் முன்வைக்கிறது. இந்த நேரத்தில் நான் கருணாநிதி அவர்களுக்கு எனது இதையப்பூர்வமான அஞ்சலியை செலுத்திக்கொள்கிறேன். வருகின்ற 2047-ம் ஆண்டிற்குள் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாகி இருக்கும்.. அதற்கு கலைஞரின் தொலை நோக்கு பார்வை உதவும்.
தமிழ் மொழியையும்., அதன் கலாசாரத்தையும் பேணிக்காப்பதில் பன்முகத்தன்மை கொண்ட கலைஞரின் பங்கு மகத்தானது. கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணய வெளியிட்டு விழா மாபெரும் வெற்றி அடையட்டும் என்று பிரதமர் மோடி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி கடிதம் :
அதேபோல் காங்கிரஸ் மூத்த தலைவர் “ராகுல் காந்தி கூறியிருப்பதாவது., கலைஞரின் சமூக பார்வையானது லட்சக்கணக்கான மக்கள் சுய மரியாதையுடன் வாழ வழி செய்துள்ளது. கலைஞர் ஆட்சியில் தமிழ்நாடு வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது.. என குறிப்பிட்டுள்ளார்..
முதலமைச்சர் ஸ்டாலின் பதில் :
அவர்கள் இருவரின் கடிதத்தையும் பெற்ற முதலமைச்சர் ஸ்டாலின் எனது தந்தையும் மறைந்த முதலமைச்சர் கலைஞர் அவரின் வழிகாட்டுதலை புரிந்துக்கொண்டது மட்டுமின்றி நாணயம் வெளியீட்டு விழாவை குறித்தும் வாழ்த்து கடிதம் எழுப்பியவர்களுக்கு நன்றி எனக்கூறி பதில் கடிதம் அனுப்பியுள்ளார்..