கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா..! ஓராண்டில் செய்த சாதனைகள்..!!
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை கொண்டாடும் விதமாக கடந்த ஒருவருடமாக தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர். கலைஞரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக கடந்த ஆண்டு மே 25ம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன் ஒரு தொடர்ச்சியாக தலைமை செயலாளர் தலைமையில் 5 ஆய்வு கூட்டங்கள் நடைபெற்றது.. அதில் அமைச்சர்கள் தலைமையில் 12 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டது..
அதனையடுத்து முதலமைச்சர் தலைமையிலும், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையிலும், காந்தியடிகளின் பேரன் கோபால கிருஷ்ண காந்தியால் கடந்தாண்டு ஜூன்.2ம் தேதி கலைஞர் நூற்றாண்வு விழாவை கொண்டாடும் விதமாக ‘‘கலைஞர் 100’’ என்ற இலச்சினை வெளியிடப்பட்டது. அதன் பின், கடந்த ஆண்டு ஜூன் 15ம் தேதி கிண்டி கிங் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் கலைஞர் நூற்றாண்டு நினைவு மருத்துவமனையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதன் பின் கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மாரத்தான் போட்டி, ‘‘ www.kalaignar100.com’’ என்ற கலைஞர் நூற்றாண்டு விழா இணையதளம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல், பேரறிஞர் அண்ணா நினைவிடம் புதுபிக்கப்பட்டும் கலைஞருக்கு நினைவிடம் நிலவறையில் கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி திறந்து வைத்தார்,
அதுமட்டுமின்றி, 8,34,40,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திண்டுக்கல் மாவட்டம் காளாஞ்சிப்பட்டியில், கலைஞர் நூற்றாண்டு, ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு மையம் தொடங்கி வைக்கப்பட்டது. அதற்காக 12 சிறப்பு குழுக்களை அமைத்து ஒவ்வொரு குழுவிற்கு 25 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திற்கு 3 நிகழ்ச்சிகள் நடத்த 11,80,000 ரூபாய் வீதம் 38 மாவட்டங்களுக்கு 4,கோடியே 48 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாது,10 மற்றும் 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் வருவாய் மற்றும் மாவட்ட அளவில் அரசுப் பள்ளிகளில் படித்து முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கான ஊக்கதொகை வழங்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 2 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 76 லட்சம் கலைஞர் நூற்றாண்டு தமிழ் ஊக்குவிப்பு நிதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழ்நாட்டில் வாழும் 275 தமிழ் அறிஞர்களை சிறப்பிக்கும் வகையில், ஒவ்வொருவருக்கும் 10 ஆயிரம் ரூபாய் நிதி வைப்பு அளிக்கப்பட்டுள்து. 27,50,000 நிதி ஒப்படைப்பு செய்து அரசாணை வழங்கப்பட்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..