தமிழகத்தை வஞ்சிக்கும் கர்நாடக..!! மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேதனை..!!
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கேட்டுகொண்டுள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள தாயகத்தில் மதிமுக உருவாக உயிர்நீத்த நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயன், மேலப்பாளையம் ஜஹாங்கீர், உப்பிலியாபுரம் வீரப்பன், கோவை காமராசபுரம் பாலன் ஆகியோரின் நினைவு நாளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைப்பெற்றது.
இதில், மதிமுக பொதுசெயலாளர் வைகோ நிகழ்வில், துணை பொது செயலாளர் மல்லை சத்யா, முதன்மை செயலாளர் துரை வைகோ ஆகியோர் கலந்து கொண்டு தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்து வைகோ, காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையே உதாசினம் செய்துவிட்டு கர்நாடக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக வேதனை தெரிவித்தார்.
5 மாநில தேர்தல், நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக என தெரிவித்த அவர், நாடாளுமன்ற தேர்தலுக்கு தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் இன்னும் பேச்சுவார்த்தை தொடங்கவில்லை என கூறினார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..