“காசி விஸ்வநாதர் கோவில் தேரோட்டம்” காண கண்கோடி வேண்டும்…
பழமையான கோவிலான “காசி விஸ்வநாதர்” கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு திருவிழா கடந்த 30ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக நடைபெற்ற சிறப்பு பூஜை, கொடியேற்றத்திலும் அதிகமான பக்தர்கள் பங்கேற்றனர்..
திருவிழா நாட்களில் அன்றாடம் காலை மற்றும் மாலை வேளையில் சிறப்புப் பூஜைகள் அதனைத் தொடர்ந்து மண்டகப்படி பூஜை நடைபெற்றது.
திருவிழாவின் 9-ம் நாளான இன்று முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது.
காலை 9 மணிக்கு புறப்பட்ட உலகம்மன் தேர் 4 ரத வீதிகள் வழியாக வலம் வந்து 10.15 மணிக்கு நிலையம் வந்தடைந்தது.
தேரினை பக்தர்கள் திருவாசகம் பாடி, கோஷங்கள் எழுப்பி, பாடல்கள் பாடி, மேளதாளங்கள் முழங்க உற்சாகத்துடன் பிடித்து இழுத்தனர்.
தேரோட்டத்தில் பங்கு பெற்ற பக்தர்களுக்கு சுவையான அன்னதானம் வழங்கப்பட்டது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..