பிரதமர் நரேந்திர மோடியின் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இந்திய நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது. ஜூலை 20 ஆம் தேதி தொடங்கிய தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடர், மணிப்பூரில் நடந்த வன்முறைகள் குறித்து மோடி உரையாற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்களின் எதிர்ப்புகளால் முடக்கப்பட்டு வருகிறது. மேலும் மணிப்பூர் விவகாரத்தில் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானமும் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்றும் இன்றும் நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில் மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது திமுக எம்.பி கனிமொழி உரையாற்றினார்.
கனிமொழி உரை;
மணிப்பூரில் படுகொலைகளைத் தடுக்க மாநில அரசும் மத்திய அரசும் தவறிவிட்டன. மணிப்பூரில் உணவு, தண்ணீர் என அடிப்படை தேவைகள் கூட மக்கள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலை வைத்துள்ளீர்கள். மதுரையில் பாண்டிய மன்னனின் செங்கோல் தகர்ந்த கதை உங்களுக்கு தெரியுமா? கண்ணகி மதுரையை எரித்த கதை தெரியுமா உங்களுக்கு? எங்களை ஹிந்தி படிக்கச் சொல்வதைவிட நீங்கள் சிலப்பதிகாரம் படியுங்கள் அதில் உங்களுக்கான பாடம் உள்ளது என எம். பி. கனிமொழி கருணாநிதி ஆவேசமாக பேசினார்.
Discussion about this post