கன்னியாகுமரியில் இரவில் நடமாடும் புலிகள்..!! நடவடிக்கை எடுக்காத வனத்துறை..!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருமனை பத்துக்காணி காட்டு பகுதியில் இரவில் புலிகள் நடமாடுவதாகவும் மக்களை தாக்குவதாகவும் வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்த வனத்துறையினர் புலிகளை பிடிப்பதற்காக ஆங்காங்கே கூண்டுகள் வைத்து இருப்பதாக பொது மக்களிடம் கூறியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் சிற்றாறு சிலோன் காலனி பகுதியில் உள்ள புலி ஒன்று அட்டகாசம் செய்து வந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள ஆடு, மாடு. நாய் மற்றும் கோழி உட்பட பல மிருகங்களை கடித்து சிதறி வேட்டையாடி உள்ளது.
கடந்த 30ம் தேதி கோதையாறு பகுதி அருகேயுள்ள மோதிர மலையில் ரப்பர் பிளாஸ்டிக் நிறுவனத்தில் வேலை செய்து விட்டு வந்து கொண்டிருந்த சிவகுமார் என்பவரை புலி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
30ம் தேதி இந்த சம்பவம் நடந்த பின்னும் வனத்துறையினர் புலிகளை பிடிக்காமல் இருந்துள்ளனர்.., எனவே இதனை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன் பத்துக்காணி பகுதிக்குள் நுழைந்த புலி அந்த பகுதியில் இருந்த ஒரு ஆடு மந்தைக்குள் புகுந்து பல அடுகளை சேதப்படுத்தியுள்ளது.
எனவே ஆத்திரமடைந்த மக்கள் வனத்துறை அதிகாரிகள் அலுவலகம் முன் முற்றுகையிட்ட பின்னரே புலிகளை பிடிப்பதற்கு நேற்றும் இன்று காட்டு பகுதிக்குள் மயக்க ஊசி மற்றும் துப்பாக்கியுடன் காட்டுக்குள் தேடுதல் பணியில் இறங்கியுள்ளனர்.
அதுமட்டுமின்றி புலியை பிடிப்பதற்காக ஆங்காங்கே கூண்டுகளும் அமைக்கப்பட்டு இருப்பதால்.. இன்னும் இரண்டு நாட்களுக்குள் புலியை பிடித்து விடுவோம் என கூறியுள்ளனர்.
Discussion about this post