மணிப்பூர் அரசை எதிர்த்து திருவள்ளூரில் கண்டன ஆர்ப்பாட்டம்..!!
மணிப்பூரில் தற்போது நிலவிவரும் வன்முறை குறித்தும் அதற்கான காரணம் கிறிஸ்துவர்கள் தான்.., கிருஸ்துவர்களை தாக்குவது குறித்து திருவள்ளூரில் கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில், மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்றும் வரும் கலவரத்தில் கிறிஸ்தவ திருச்சபைகள் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, திருவள்ளூர் பஜார் வீதியில் அனைத்து கிறிஸ்தவ திருச்சபைகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
மீஞ்சூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இயங்கி வரும் ரோமன் கத்தோலிக்.., இ.சி.ஐ.., சி.எஸ்.ஐ.., சர்ச் ஆஃப் காட்.., ஏஜி, ஏசிஏ சர்ச் ஆப் கிரிஸ்ட், பெந்த கொஸ்தே திருச்சபை மற்றும் அனைத்து சுயா தீன திருச்சபை போதர்களும். மற்றும் அந்த திருச்சபையின் மக்கள் உட்பட சுமார் 200க்கும் மேற்பட்டோர் இந்த கண்டன ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆதித் தமிழர் மற்றும் விடுதலை இயக்கத்தின் தலைவர் “வினோத்” தலைமை தாங்கினார். அதில் கலந்து கொண்டு பேசிய அவர் நீதி கிடைக்கும் வரை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை நாங்கள் எங்கள் கண்டனத்தை தெரிவித்துக்கொண்டே இருப்போம் என அவர் பேசினார்.