அமைச்சர் கோப்பைக்கான சதுரங்க போட்டியில் பெண் வீராங்கனை வெற்றி..!!
தமிழக அளவில் நடந்த சதுரங்க போட்டியில் முதலமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் முதல் பரிசு பெற்ற வீராங்கனையை பாராட்டி பரிசுகள் மற்றும் கோப்பை வழங்கினார்.
தமிழக அளவில் நடந்த முதல்- அமைச்சர் கோப்பைக்கான சதுரங்க போட்டியில் பெண்கள் பிரிவில், மதுரையை சேர்ந்த ராஜசூர்யா என்பவர் முதல் பரிசு பெற்று தங்க பதக்கமும், ரூ. 1 லட்சம் ரொக்கபரிசும் பெற்றிருக்கிறார். இதனை தொடர்ந்து முதல் பரிசு பெற்ற ராஜ சூர்யாவை, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா நேரில் அழைத்து பாராட்டினார்.
இதுகுறித்து ராஜ சூர்யா பேசும்போது :
6 வயதில் இருந்தே நான் சதுரங்க போட்டியில் விளையாடி வருகிறேன். கடந்த 2003-ல் ஆசிய போட்டியில் சாம்பியன் பட்டத்தை பெற்றேன். அதன் பின் 2004-ம் ஆண்டு இலங்கையில் நடந்த ஆசிய போட்டியில் 3-ம் பரிசும், காமன்வெல்த் போட்டியில் வெண்கல பதக்கமும் வென்றேன். கிரீஸ் நாட்டில் நடந்த சர்வதேச போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டு, 19-வது இடம் பெற்றிருக்கிறேன்.
இதுபோல், இந்தியா சப் ஜூனியர் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா ‘இ’ அணியின் கேப்டனாக இருந்து பதக்கம் பெற்றிருக்கிறேன். அது மட்டுமின்றி, பல தேசிய போட்டிகளில் வெண்கலமும், வெள்ளி பதக்கமும் வென்றுள்ளேன் அதற்கு காரணம் என் விடா முயற்சி தான் என வெற்றி காரணம் குறித்து வீராங்கனை பேசினார்.
Discussion about this post