நாட்டின் 69-வது தேசிய விருதுகள் பட்டியலில் மொழிவாரித் தேர்வில் தமிழில் சிறந்த படமாக கடைசி விவசாயி தேர்வாகியுள்ளது. இப்படத்தில் தாத்தா கதாபாத்திரத்தில் நடித்த நல்லாண்டிக்கு சிறப்பு விருதும் அறிவித்துள்ளனர். நடிகர் மாதவன் நடிப்பில் உருவான ‘ராக்கெட்ரி’ படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது அறிவித்துள்ளனர். இதையும் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருது!
சிறந்த பாடகிக்கான விருதை ‘இரவின் நிழல்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மாயவா தூயவா’ பாடலுக்காக ஷ்ரேயா கோஷலுக்கு அறிவித்துள்ளனர். இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா சிறந்த இசையமைப்பாளர் விருதுக்கு தேர்வாகியிருக்கிறார். கருவறை என்ற ஆவணப்படத்திற்கு இசையமைத்ததற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.