அஷ்டலட்சுமியின் அருள் கிடைக்க இந்த மந்திரத்தை உச்சரித்தால் போதும்..!
சமையல் செய்யும் போது, அடுப்பிலுள்ள சாதம் பொங்குவது போல, மனதில் ஏதோ குடும்பப் பிரச்சனைகளை நினைத்துக் கொண்டு பொங்கினால், அந்த உணவை சாப்பிடுகின்ற அத்தனை பேர் மனமும் பாதிக்கும். எந்த உணர்வுடன், அந்த உணவு சமைக்கப்பட்டதோ, அதே உணர்வு தான் சாப்பிட்ட அனைவருக்கும் ஏற்படும்.
ஆனால் இறைநாமத்தை சொல்லியபடியே, பக்திபாடல்களை பாடிய படியோ சமைத்தால், நிச்சயம் அந்த உணவிற்கு தனி சக்தி ஏற்படும். அது சாப்பிடுபவர்கள் அனைவருக்கும் நன்மையை தரும்.
பெண்கள் சமையல் செய்யும் போது சவுந்தர்ய லஹரி, அபிராமி அந்தாதி போன்ற அம்பாள் ஸ்லோகங்களைச் சொல்லிக் கொண்டே சமைக்கலாம். குழந்தைகள் படிக்கவில்லையே… கணவன் மனைவி சண்டை போன்றவை மறந்துவிட்டு, சமையல் செய்யும்போது, இறைநாமங்களை மனநிறைவுடன் பக்தியுடன் பாடியபடியே சமைத்தால் காலப்போக்கில் உணவே மருந்தாகி அத்தனைபேர் மனமும் திருந்திவிடும். பக்திக்கு அப்படியொரு சக்தி இருக்கிறது.
கீழே உள்ள மந்திரத்தை ஜெபிப்பதன் பலனாக குடும்பத்தில் உள்ள வறுமைகள் அனைத்தும் நீங்கி அனைத்து விதமான செல்வங்களும் வந்து சேரும். அதோடு அஷ்ட லட்சுமியின் அருளும் கிடைக்கும்.
பொது பொருள் :
சர்வ சக்திகளுக்கும், ஆதி சக்தியான தேவியே, அனைத்து விதமான மங்களங்களையும் அருள்பவளே, ஜீவராசிகள் அனைத்தையும் காப்பவளே, மூன்று கண்களை கொண்டவளே உன்னை வணங்குகிறேன்.
அம்பிகையை நேரில் காண
நாயகி : நான்முகி; நாராயணி; கை நளின பஞ்ச
சாயகி : சாம்பவி; சங்கரி; சாமளை; சாதிநச்சு
வாயகி : மாலினி; வாராகி; சூலினி; மாதங்கி என்று
ஆயகி : ஆதி உடையாள் சரணம் அரண் நமக்கே.
பொருள் :
அம்பிகை, நான்கு திருமுகங்களை உடையவள். நாராயணனின் தங்கை என்பதால் நாராயணி தாமரை போன்ற கரத்தில் ஐந்து மலரம்புகளை ஏந்தியவள். சம்புவின் துணைவி என்பதால் சாம்பவி. இன்பங்களைத் தருபவளான சங்கரி, பச்சை (சாமள) நிறம் பொருந்தியவளாதலால் சாமளை, வாயிலே நஞ்சைக் கொண்ட பாம்பை மாலையாக அணிந்தவள்.
ஒரு சமயம் வராகத் தோற்றத்துடன் தரிசனம் தந்ததால் வாராகி, சூலத்தை ஏந்தினவள் என்பதால் சூலினி, மதங்க முனிவரின் திருமகளாதலால் மாதங்கி என்ற பல திருநாமங்களால் அழைக்கப்படும் புகழையுடைய அபிராமியின் திருவடிகள் என்றும் நமக்குப் பாதுகாப்பாயிருந்து காக்கவல்லவை.
சகல சௌபாக்கியங்களும் அடைய
தனந்தரும் : கல்வி தரும்; ஒருநாளும் தளர்வறியா
மனந்தரும் : தெய்வ வடிவுந்தரும்; நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும் : நல்லன எல்லாம் தரும்; அன்பர் என்பவர்க்கே
கனந்தரும் : பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.
பொருள் :
நறுமண மலர் சூடிய, மேகத்தைப் போன்ற கூந்தலையு டைய அபிராமி அன்னையின் கடைக்கண்கள், அவளை வழிபடும் அடியவர்களுக்கு எல்லா வகையான ஐசுவர்யங்களையும் அள்ளித் தரும். நல்ல கல்வியைத் தரும். ஒருநாளும் ஒரு பொழுதும் தளர் வறியாத உள்ளத்தைத் தரும். தெய்வீகமான அழகைத் தரும். உள்ள த்தில் கள்ளமில்லாத உறவினர்களின் நட்பைத் தரும். இவை தவிர நல்லவை என்று இன்னும் என்னென்ன உண்டோ அவை அத்தனை யையும் தரும்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..