நில அபகரிப்பு வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை மாநகராட்சி 49-வது வார்டில் கள்ள ஓட்டு போட வந்ததாக கூறி தி.மு.க. பிரமுகர் நரேஷ் தாக்கப்பட்டார். இந்த வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
மேலும் அவர் சாலை மறியலில் ஈடுபட்டதாக 2-வது வழக்கிலும், ரூ.5 கோடி மதிப்புள்ள தொழிற்சாலையை அபகரித்ததாக 3-வது வழக்கிலும் கைது செய்யப்பட்டார்.
நில அபகரிப்பு வழக்கில் ஜாமீன் கேட்டு செங்கல்பட்டு மாவட்ட செசன்சு கோர்ட்டில் ஜெயக்குமார் தரப்பில் அளிக்கப்பட்ட மனு மனு நேற்று(மார்ச்.04) விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனா, ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், நில அபகரிப்பு வழக்கில் ஜாமீன் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.