ஜம்முகாஷ்மிர் வாக்கு பதிவு..!! பயமில்லா சூழல்..!! அமித்ஷா பேச்சு..!
ஜம்மு-காஷ்மீரின் எவ்வித பயமுமின்றி செல்லும் சூழலை பாஜக உருவாக்கியுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஹரியானா மாநிலம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்திருந்தார்.. ஜம்மு-காஷ்மீரில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவித்திருந்தார்..
அதன்படி செப்டம்பர் மாதம் 9-ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.. அதில் 3 லட்சம் வக்காளர்கள் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது..
அதன் பின் இரண்டாம் கட்ட வாக்கு பதிவானது நேற்று நடைபெற்று முடிந்தது.. அதில் 56.12% வாக்குகள் பதிவாகியிருப்பதாக தகவல்கள் வெளியானது..
தற்போது மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 1-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் உதம்பூர் பகுதியில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது ஜம்மு-காஷ்மீரின் லால் சௌக் பகுதிக்கு யாரும் எவ்வித பயமுமின்றி செல்லும் சூழலை பாஜக உருவாக்கியுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.
நீக்கப்பட்ட சட்டப்பிரிவு 370 ஐ ஒருபோதும் மீண்டும் கொண்டு வர முடியாது என்வும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள் தங்கள் வாரிசுகள் மற்றும் உறவினர்கள் குறித்து மட்டுமே சிந்தித்ததாகவும் அமித் ஷா தெரிவித்தார்..
இதற்கிடையில் முதற்கட்ட வாக்கு பதிவின் போது., நள்ளிரவு சுமார் இரண்டரை மணி அளவில் எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் துருப்புகள் சுட்டதாகவும் பதிலுக்கு தங்கள் தரப்பில் இருந்து தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் எல்லை பாதுகாப்புப் படை தெரிவித்தனர்.. எனவே இனி இதுபோன்ற வன்முறைகள் நடக்காமல் இருக்க பாஜக அரசு வழிவகை செய்துள்ளதாக தெரிவிதுள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..