சித்தராமையா மூடா முறைகேடு வழக்கு..!! பதவி ராஜினாமா..!! அனுராக் தாக்கூர் வலியுறுத்தல்..!!
மூடா ஊழல் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்த கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் என அனுராக் தாக்கூர் வலியுறுத்தியுள்ளார்..
மைசூர் மாநகராட்சி வளர்ச்சி குழுமம் (மூடா) சார்பில் முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு நிலம் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் முறைகேடு நடந்துள்ளதாகவும் அதனால் வளர்ச்சி குழுமத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தது..
ஆனால் சித்தராமையா தரப்பில் தன்னுடைய மனைவிக்கு நிலம் ஒதுக்கீடு செய்ததில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்றும். மூடாவின் சட்ட விதிமுறைகள் பின்பற்றி தான் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்..
மேலும் நான் முதல்வராக இருந்தபோது நிலம் ஒதுக்கீடு செய்யவில்லை. பாஜக ஆட்சி காலத்தில் தான் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் சித்தராமையா விளக்கம் அளித்தார்..
அதேசமயம் இந்த முறைகேடு விவகாராத்தில்.., முதலமைச்சரின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ளத எதிர்கட்சிகள், “முதலமைச்சர் சித்தராமையா பதவி விலக வேண்டும்”. முறைகேடு புகாரை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிட விட வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணைய (முடா) ஊழல் வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த கர்நாடக லோக்ஆயுக்தாவுக்கு பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர், ஊழல் குற்றச்சாட்டில் தொடர்புடைய முதல்வர் சித்தராமையா உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார்.
குற்றச்சாட்டுகள் நிவர்த்தியாகும் வரை அவர் பதவியை தொடரக்கூடாது என்றும், பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என்றால், முதல்வர் பதவியில் அவர் நீடிக்கக் கூடாது என்றும் தாக்கூர் கூறினார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு அமைந்தத முதல் அங்கு மீண்டும் மக்களை கொள்ளையடிக்கும் வேலை தொடங்கியுள்ளது என்பதையே இது காட்டுவதாகவும் தாக்கூர் விமர்சித்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..