சென்னை மாநகரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உள்ளதாகவும் அதற்கான இடம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் மக்கள் நீதி மையம் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மக்கள் நீதி மையம் தலைவர் அவரது கட்சியினருடன் கலந்துரையாடினர் அதை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த அவர். முதலில், பாஜக மதத்தை வைத்து அரசியல் செய்து வருகிறது என்று கூறினார். மேலும் பேசிய அவர், தமிழ்நாட்டில் ஒருபொழுதும் மதபிரிவின்மையை ஏற்படுத்த முடியாது என்று பேசினார். மத அரசியலை தடுக்க ராகுலின் பாதயாத்திரை ஒற்றுமை நிலை நாட்டும் வகையில் அமைந்துள்ளது என்றுய் பேசினார்.
மேலும் பேசிய அவர், சென்னை மாநகரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் அதற்கான மைதானம் மற்றும் இடத்தை விரைவில் அறிவிப்போம் என்று கூறினார். இதனை தொடர்ந்து நகர்ப்புறங்களில் வாழும் மக்களுக்கு ஜல்லிக்கட்டு விளையாட்டின் பெருமையை புரியவைக்க வேண்டும் என்று பேசினார். சென்னை மெரினா கடற்கைரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என்பது தனது ஆசை என்றும் அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
Discussion about this post