அடுத்த ஆண்டு அயோத்தியில் இது கொண்டாடப்படும்..? திட்டவட்டமாக சொன்ன பிரதமர் மோடி
நாட்டைப் பிளவுபடுத்தும் சாதி மற்றும் பிரிவினைவாத சக்திகளை ஒழித்துக் கட்ட வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
டெல்லியில் ராம்லீலா மைதானத்தில் தசரா விழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு ஆளுயுர மாலை அணிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவில் பொது மக்களுடன் இணைந்து ராமாயணத்தின், கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட ராம் லீலா நாடகத்தை பார்வையிட்டார்.
விழாவில் பேசிய பிரதமர் மோடி. ஆயுதங்களை வைத்து பூஜை செய்து வணங்குவது எந்த நிலத்தையும் ஆக்கிரமிப்பதற்கு அல்ல என்றும், சொந்த நிலத்தை காக்கவே என்றும் பிரதமர் தெரிவித்தார்.
மேலும், அடுத்த ஆண்டு ராம நவமி விழா அயோத்தியில் கொண்டாடப்படும் என்றும் கூறினார்.
இயற்கை விவசாயம், டிஜிட்டல் பரிமாற்றம். சுகாதாரம் உள்ளிட்ட பத்து சபதங்களை இத்திருநாளில் மேற்கொள்ளுமாறும் கூறிய பிரதமர், நாட்டைப் பிளவுபடுத்தும் சாதி மற்றும் பிரிவினைவாத சக்திகளை ஒழித்துக் கட்ட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வாக ராவணன், மேகநாதன், கும்பகர்ணன் உருவபொம்மைகளை எரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
Discussion about this post