சென்னையில் சிலிண்டர் இவ்வளவு விலையா..!!!
சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 23 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து 1,960 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை பொறுத்து இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை 12 ரூபாய் 50 உயர்ந்தது. 1,924 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட சிலிண்டரின் விலை 1937 ஆக அதிகரித்தது.
இந்நிலையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 23 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து 1,960 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)