பண வரவு அதிகரிக்க இந்த திருத்தலம் சென்றால் போதும்..!!
ஸ்ரீதேவி எனும் மகாலட்சுமி வைகுண்டத்தை விட்டு வெளியே வந்து, மற்ற தேவியவரை விட தானே சிறந்தவள் என்பதை நிரூபிப்பதற்காக தங்காலமலை என்ற திருத்தலதிற்கு வந்து தவமி இருந்தவர்.
மஹாலக்ஷ்மிக்கு பல திருத்தலங்கள் இருந்தாலும் சில குறிப்பிட்ட முக்கிய திருத்தலங்களை பார்க்கலாம்.
திருநின்றவூர் :
திருமாலின் திருமார்பினியில் இருந்து நீங்காமல் இருக்கும் வரம் வேண்டி அலைமகளாம் லட்சுமிதேவி இங்கு ஈசனை பூஜித்து பேறு பெற்றதாக ஐதீக வரலாறுகள் கூறுகின்றன.
கருவறைக்குள் கருணையோடு மகாலட்சுமி ஈஸ்வரர் என்கிற திருப்பெயரோடு, ருத்ராட்சப் பந்தலின் கீழ் அருள்பாலிக்கிறார். தேவாதி தேவர்கள் நித்தமும் வந்து இந்த சிவ பெருமானை வணங்கி செல்லும் ஒரு சிறந்த தளமாக இது விளங்குகிறது.
வழக்கமான தேவகோஷ்ட மூர்த்தங்களோடு மகாவிஷ்ணுவும், கஜலட்சுமியும் தனி அழகோடு காட்சி கொடுக்கின்றனர். நீலி மலர்ப் பொய்கை லட்சுமி தீர்த்தமாகவும், விளா மரம் தல விருட்சமாகவும் விளங்குகின்றன.
அனுஷ நட்சத்திரம் உடையவர்கள் வழிபட வேண்டிய ஒரு சிறந்த தளம் இது, அனுஷத்திற்கு அதிதேவதையே மகாலட்சுமி தான். செல்வ செழிப்பு உண்டாக லட்சுமி ஹோமம் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ பூஜை செய்தால் செல்வல் செழிக்கும். தாமரை இதழை எடுத்து ஹோம அக்னியில் தேன் விட்டு யாகங்கள் செய்யதால் சிறந்தது.
Discussion about this post